நாட்டில் இன்று மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்

🕔 April 14, 2016

Raining - 01நாட்டின் பல பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மழை பொழிவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மிகக் கடுமையான வெப்பத்தால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே, இவ்வாறு மழை வீச்சிக்கான எதிர்வு கூறல் விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலேயே இன்று பிற்பகல் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தென் மற்றும் மேற்கு கரைகளில் இன்று காலை மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்