வற் வரி, மே 02 முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படுகிறது

🕔 April 15, 2016

VAT - 01பெறுமதி சேர் வரி (VAT), மே மாதம் 02ஆம் திகதி முதல் 15%  ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக வற் வரி அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆயினும், மறுஅறிவித்தல் வரை இந்த அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க, ஏப்ரல் 01ம் திகதியன்று அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

இதற்கிணங்க, ஏற்கனவே இருந்தது போன்று 11% ஆக பெறுமதி சேர் வரி இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த வற் வரி அதிகரிப்பு, மீண்டும் மே மாதம் 02ஆம் திகதி முதல், நடைமுறைக்கு வருமென்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பானது சுகாதார துறை மற்றும் தொடர்பாடல் துறைகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிப்பதாக தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்