மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை

🕔 April 13, 2016

Yoshitha - 0986யோசித்த ராஜபக்ஷ, மீண்டும் நிதி மோசடிக் குற்றசாட்டில் சிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவு இந்தக் குற்றச்சாட்டினை மேற்கொள்ளவுள்ளது.

சி.எஸ்.என். தொலைக்காட்சிக்கு முதலீடு செய்வதற்காக, யோசித்தவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதை வெளிப்படுத்தாமை காரணமாக, அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இந்தநிலையில், பல மில்லியன்கள் செலவில் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் கட்டப்பட்டுள்ள சொகுசுவீடு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ள காணி, கல்கிஸ்ஸை பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமானதாகும். அதன் சந்தைப்பெறுமதி 49 மில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், யோசித்த ராஜபக்ஷ அதனை வெறுமனே 4.5 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்திருந்தார்.

குறித்த வீட்டினை, தமது திருமணத்தின் பின்னர் வாழ்வதற்காகவே யோசித நிர்மாணித்தார் என்று கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்