சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

🕔 April 1, 2016
Duminda dissanayake - 01ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என்று, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஒழுக்காற்று விதிகளை மீறியதாக தெரிவித்து குறிப்பிட்ட 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்றுக் குழு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தது.

இதற்கிணங்க, கடந்த 29ம் திகதி விசாரணைக்காக ஒழுக்காற்றுக் குழு முன் ஆஜராகுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இருப்பினும், இவர்கள் ஆஜராகாது கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்துள்ளனர்.

தனால், இவர்கள் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள்.

அத்துடன், எதிர்வரும் தேர்தலிலும் இவர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்காதிருக்கவும் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்