மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு

சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;
“எனக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ளது. அதனை திருத்தும் நடவடிக்கை இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த வாகனத்தை திருத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். எனினும், ஜனாதிபதியின் செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் வாகனத்தை திருத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
போரை வென்றெடுத்த எனக்கு, குண்டு துளைக்காத வாகனத்தை திருத்திக் கொடுக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலைமை வருத்தமளிக்கின்றது.
எனது உத்தியோகபூர்வ இல்லம் இன்னமும் புனரமைக்கப்படவில்லை. இன்னும் எவ்வளவு காலம் வரையிலும் உத்தியோகபூர்வ இல்லத்திற்காக காத்திருக்க நேரிடுமோ தெரியவில்லை” என்றார்.