தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி

🕔 March 31, 2016

Ranil - 0988டக்கிலுள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்திருப்பின், அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழக்கியிருக்கலாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த வெடி பொருட்கள் வௌ்ளவத்தையிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு வர இருந்ததாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளதாகவும், அது பற்றி அவர் அறிந்திருப்பின் பொலிஸாரிடம் ஏன் சொல்லவில்லை எனவும் பிரதமர் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.

திறைசேரியின் புதிய கட்டடத்தை இன்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜீ.எல். பீரிஸ் எனது நண்பராக இருந்தாலும் தற்போது அவர் நெப்போலியனின் பாத்திரத்தில் நடித்து வருகிறார் என இதன்போது குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்துக்கு என்ன ஆனது என்பது குறித்தும் பீரிஸ் பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் ஆயுதங்கள் குறித்து பொலிஸாரால் தனக்கும், ஜனாதிபதிக்கும் அப்போதே தெரியப்படுத்தப்பட்டதாகவும், இது குறித்து ரசாயன பகுப்பாய்வாளரும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நடைபெற்ற எந்தவொரு நாட்டிலும் பிற்பட்ட காலங்களில் இப்படியான பொருட்களை கண்டுபிடிக்க முடியும் என்றும், எவ்வாறாயினும் இது குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்