சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு

🕔 April 1, 2016

DM. Swaminathan - 0987
– அஷ்ரப் ஏ சமத் –

மைச்சர்  டி.எம். சுவாமிநாதனின் கீழ் இயங்கும் மீள்குடியோற்றம் ,சிறைச்சாலைகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் அலுவலகம் ஒன்றுக்காக, தனியார் கட்டிடமொன்றுக்கு 30 லட்சம் ரூபாவினை வாடகையாகச் செலுத்தும் தீர்மானத்துக்கு, அந்த அமைச்சரின் கணக்காளர் ஏ.எம். மாஹிர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள LEEDONS BUILDERS PVT Lte எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் ஒரு பகுதியை, மேற்படி அமைச்சின் அலுவலகத்துக்காகப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டு, அதற்குரிய மாதாந்த வாடகையாக 00 லட்சத்து 537 ரூபாவினை செலுத்துவதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும், குறித்த வாடகை ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியாது எனத் தெரிவித்துள்ள மேற்படி அமைச்சின் கணக்காளர்,  இவ்விடயம் தொடர்பில்  அமைச்சர் டி.டிம். சுவாமிநாதன், மீள்குடியோற்றம் ,சிறைச்சாலைகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் செயலாளர் மற்றும் பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அரசாங்க நிதியிலிருந்து 30 இலட்சம் ரூபாவினை, மாதாந்தம் தணியாா் கட்டிடமொன்றுக்கு வாடகை எனும் பெயரில் செலுத்துவதற்கு – தான் உடன் பட வில்லை  எனவும் கணக்காளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்