நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு

🕔 March 31, 2016

Hasan Ali - 097தேசி­யப்­பட்­டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்டு, கட்­சிக்கு – தான் அழுத்தம் கொடுப்பதாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பிர­சா­ரங்கள் பொய்யா­னவை என்றும் அவற்றை நம்பவேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்­துள்ளார்.

கட்சித்தலை­மைக்கும் தனக்­கு­மி­டையில் எழுந்­துள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

தேசி­யப்­பட்டில் உறுப்­பினர் பதவி கேட்டு, நான் கட்­சிக்கு அழுத்தம் கொடுப்­ப­தா­கவும் நான் பதவி ஆசை பிடித்து அலைந்து திரி­வ­தா­கவும் சித்­தி­ரிக்கும் முயற்­சிகள் கடந்த சில நாட்­க­ளாக பல ஊடகங்கள் ஊடாக ஒரு சாராரால் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

திட்­ட­மிட்டு ஒரு சாராரால் கட்­ட­விழ்த்­து­வி­டப்­படும் இவ்­வா­றான வதந்­தி­களை எவரும் நம்ப வேண்டாம் என வேண்டிக் கொள்­கிறேன்.

கடந்த ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடை­பெற்ற நாடாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு முன்­னரே, என்னை இம்முறை நாடாளு­மன்­றத்தில் ஒரு உறுப்­பி­ன­ராக பிர­வே­சிக்­கக்­கூ­டாது என்ற ஒரு திட்­ட­மி­டப்­பட்ட சதி­வலை வீசப்­பட்­ட­தனை, பின்னர் தொடர்ந்த சம்­ப­வங்­களைக் கொண்டு என்னால் அனு­மா­னிக்க முடிந்­தது.

எனவே, நான் இந்த தேசி­யப்­பட்­டியல் விட­யத்தில் இருந்து அப்­போதே வேத­னை­யுடன் விடைபெற்றுக் கொண்டேன். ஒரு­போதும் தேசி­யப்­பட்­டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை நான் நாடப்­போ­வ­தில்லை என்­ப­தனை ஆணித்­த­ர­மாக கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

2008 ஆம் ஆண்டு நடை­பெற்ற மாகாண சபைத் தேர்­தலில் நானும் தலை­வரும் தவி­சா­ளரும் மூன்று மாவட்­டங்­களில் தலைமை வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­ய­போது, அத்­தேர்­தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்­சிகள், வேட்­பா­ளர்­க­ளை­விட அதி­கூ­டிய விருப்­பு­வாக்­கினை நான் பெற்­றி­ருந்தேன் என்­பதை நீங்கள் அறி­வீர்கள்.

அதற்குப் பிறகு, மீண்டும் ஒரு­தேர்­தலில் மக்கள் முன் போட்­டி­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் எனக்கு மறுக்­கப்­பட்­ட­துடன், தேசி­யப்­பட்­டி­ய­லினுள் நான் தள்­ளப்­பட்டு வந்தேன் என்­பதை இந்த இடத்தில் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

பின்னர் கட்­சி­யி­லி­ருந்தும் என்னைத் தூக்கி வீசு­வ­தற்­காக,  கடந்த நொவம்பர் மாதம் நடை­பெற்ற அர­சியல் உச்­ச­பீடக் கூட்டத்தில் எடுக்­கப்­பட்ட முயற்­சி­க­ளையும் நான் விளங்­கிக்­கொள்ள முடி­யாத ஞான­சூ­னி­ய­மா­னவன் அல்ல.

எனது பத­விகள் பறிக்­கப்­ப­டு­வ­தனை தட்­டிக்­கேட்ட போதெல்லாம் நியாயம் வழங்­காது, தேசியப்பட்டியல் சாயம் பூசப்­பட்டு தற்­போது அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்றேன்.

தேர்­தலில் போட்­டி­யிட எனக்கு இடம் தந்­தி­ருந்தால், நான் மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு விடுவேன் என்ற கார­ணத்தால், என்னை தேசியப் பட்­டி­யலில் முத­லா­வ­தாக பெயர் குறித்து அனுப்பி­விட்டு பின்னர் தந்­தி­ர­மாக காலை வாரி­விட்­ட­வர்­களால்தான் எனது அர­சியல் வாழ்வு இன்று களங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

எனினும் கட்சிப் போரா­ளி­களால் நான் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை என்பது மன நிறைவைத் தருகின்றது. என்மீது பற்றும் பாசமும் கொண்டு அடிக்கடி கரிசனையுடன் ஆறுதல் கூறிவரும் அஷ்ரபின் தம்பிமார்களுக்கும் தங்கைமார்களுக்கும் தோழர்களுக்கும் நன்றிகள்.

தயவு செய்து இனிமேலாவது தேசியப்பட்டியலுடன் தொடர்புபடுத்தி என்னை விமர்சிக்க வேண்டாம் என வினயமாக வேண்டிக் கொள்கிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்