விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்

🕔 May 11, 2016

Gnanasara thero - 01முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் ர­க­சி­ய­மான முறையில் எப்போதும் இல்லாதவாறு நாட்டில் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்பதாகவும், விடு­தலைப் புலிகள் அமைப்பின் செயற்­பாட்டை விடவும் அவை பயங்­க­ர­மா­னவை என்றும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் தெரிவித்தார்.

மேலும், நாட்­டி­லுள்ள  பெருமளவான காணி­களை கட்­டா­ரி­லுள்ள இளவரசர்கள் கொள்வ­னவு செய்­துள்­ளனர் என்றும், அமைச்சர் பைஸர் முஸ்­தபா இதன் பின்­ன­ணி­யில் செயற்படுவதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

பொது­பல சேனா அமைப்பு கொழும்பில் நேற்­று செவ்வாய்கிழமை ­காலை நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்;

“பொது­ப­ல­சேனா அமைப்பு தொடர்பில் சில அர­சி­யல்­வா­திகள் தவ­றான கருத்­து­களை முன்­வைக்­கின்­றனர். எமது அமைப்புக்கு அர­ச­ சார்­பற்ற நிறு­வ­னங்­களின் தொடர்பிருப்­ப­தா­கவும் குறிப்­பி­டு­கின்­றனர். நோர்­வே­யி­லி­ருந்து நிதி கிடைப்­ப­தா­கவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர்.

எனினும் அவை அடிப்­ப­டை­யற்­ற குற்றச்சாட்டுக்கள். அவ்­வாறு குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­வர்கள் நிரூ­பிக்க வேண்டும். அத­னை­வி­டுத்து ஊட­கங்ளில் வெறும் விமர்சனம் செய்­வதில் எவ்­விதப் பிர­யோ­ச­னமும் இல்லை.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வின் ஆட்­சி­கா­லத்தில் நாம் ஹலால், கூர­கல, சட்­டக்­கல்­லூரி,வில்­பத்து விவ­கா­ரங்­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுத்தோம்.  தற்­போது ஊட­கங்கள் மூலம் எமக்­கெ­தி­ராகக் குரல் கொடுப்­ப­வர்­கள்தான் அன்றும் எம்மை எதிர்த்­தனர்.

பொது­பல சேனா அமைப்பை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்தோ அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளி­ட­­மி­ருந்தோ நாம் எவ்­வித நிதி­யு­த­வி­க­ளையும் பெற்றுக்கொள்­ள­வில்லை. நாட்­டி­லுள்ள வறிய மக்கள் சிறுக சிறுக தாம் சேக­ரித்த பணத்தை அன்­ப­­ளிப்பு செய்து இந்த அமைப்­பை வளர்­த்தனர்.

நாம் இனங்­காட்­டிய பிரச்­சி­னைகள் தற்­போதும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

நாட்டில் தற்­போது என்­று­மில்­லா­த­வாறு முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் ரகசிய­மான முறையில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

கடந்த நான்கு வரு­டங்­களில் இந்­நாட்­டி­லுள்ள நான்­கா­யிரம் சிங்­கள யுவ­தி­கள் முஸ்லிம்களாக மதம் மாற்­றி­யுள்­ளனர்.

அது மாத்­தி­ர­மல்­லாமல் உலமா சபை­யினால் ‘தப்லீக் நிகாயா’ எனும் அமைப்பு  ஏற்படுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்த தப்லீக் நிகாயா அமைப்பு, ஒரு நாளில் இந்­நாட்டின் நகரப் பகு­தி­யி­லுள்ள 10 ஏக்கர் நிலப்­ப­ரப்பை கையகப் படுத்­து­வ­தனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­பட்­டுக் கொ­ண்­டி­ருக்­கி­றது. அந்­ந­ட­வ­டிக்­கைக்­காக பெரு­ம­ள­வி­லான நிதி அவ்­வ­மைப்­புக்கு கிடைக்­கி­றது. ஆக­வே இது­போன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தால் எதிர்­கா­லத்தில் பெளத்­தர்­க­ளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்­ப­டும்.

மேலும் பாரி­ய­ள­வான பரப்­புக்­கொண்ட காணி­களை கட்டார் நாட்­டி­லுள்ள இளவரசர்கள் ர­க­சி­ய­மான முறையில் கொள்­வ­னவு செய்­கின்றனர். இதன் பின்னணியில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறார்.

மேலும் ஒவ்­வொரு மாதமும் மத்­திய கிழக்­கி­லி­ருந்து சுமார் 12 ஷேக்­மார்கள் இலங்கைக்கு வருகை தரு­கி­றார்கள். ஆயி­ரக்­க­ணக்­கான பாகிஸ்­தா­னி­யர்கள் இங்குள்­ளனர். அது தொடர்பில் எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியும் குரல்­கொ­டுப்­ப­தில்லை.

எனினும் அந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதி­ராக நாம் குரல்­கொ­டுத்தால் எமக்­கெ­தி­ரான நடவடிக்­கை­களை மேற்­கொள்­கின்­றனர்.

எ­னவே, குறித்த அமைப்­பு­க­ளுக்கு வரும் நிதி தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்கொள்ள வேண்டும்.விடு­தலைப் புலிகள் அமைப்பின் செயற்­பாட்டை விடவும் தற்போது நாட்டில் மோச­மான வகையில் அடிப்­ப­டை­வா­தமும் ஆக்­கி­ர­மிப்­பு­களும் இஸ்லாம் என்ற பெயரில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. ஆகவே முஸ்லிம் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

அதனை விடுத்து எமக்கெதிராக வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டாம்.

அவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றிப் பேசாது, பொதுபல சேனா அமைப்பையே குற்றம் சுமத்துகின்றனர்.ஆகவே அவர்கள் எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எனவே, அது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அத்துடன் குற்றம் சுமத்துபவர்கள் அனைவரும் இணைந்து எம்மோடு ஊடக விவாதத்திற்கு வாருங்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்