மதுபான உற்பத்தி 2023இல் 19 வீதத்தால் குறைவடைந்ததாக, நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

🕔 May 9, 2024

லங்கையின் மதுபான உற்பத்தி 2023 இல் 19ஆல் குறைந்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதிகமாக விற்பனையான 180 மில்லி லீட்டர் மதுபான போத்தல்களின் உற்பத்தியில், சுமார் 15 மில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

2022ஆம் ஆண்டு 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல்கள் 57.7 மில்லியன் தயாரிக்கப்பட்டதாகவும், 2023ஆம் ஆண்டு அதன் எண்ணிக்கை 39.5 மில்லியனாக குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 இல் 375 மில்லி லீட்டர் மதுபான போத்தல்கள் சுமார் 36.6 மில்லியன் தயாரிக்கப்பட்டன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு 180 மில்லி லீட்டர் மதுபான போத்தல்கள் 105.8 மில்லியன் தயாரிக்கப்படதாகவும், 2023 ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கை 90.5 மில்லியனாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறினார்.

2023 ஆம் ஆண்டில் மட்டும் 214 புதிய மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலால் திணைக்களத்தினால் மொத்தமாக 5730 மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டப்பூர்வ மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதனால் – மது பாவனை அதிகரிக்கும் என நம்பப்படுகின்ற போதிலும், சட்டவிரோத மதுபானம் இன்றும் பரவலாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மது அருந்துவதை ஊக்குவிக்கக் கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், மதுபான விற்பனை உரிமக் கட்டணங்களும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஒரு மது பாட்டிலின் விலையில் 75% வரிகள் செலுத்துவதாகவும், இந்த வரிகளில் பெரும்பாலானவை மதுவையே தாங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்