ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம்; நிதியமைச்சுடன் பேசியுள்ளதாக, ஊடக அமைச்சர் தெரிவிப்பு

🕔 May 13, 2016
– அஸ்ரப் ஏ சமத் –
டகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தினை நிர்மாணிப்பதற்கும் நிதியமைச்சரின் உதவியினை நாடியுள்ளதாக ஊடக அமைச்சா் ஜயந்த கருநாதிலக்க தெரிவித்தார்.
ஊடக அமைச்சினால் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் பைக் வழங்கும் திட்டத்தின் கீழ், 25 ஊடகவியலாளா்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை மோட்டார் பைக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஊடக அமைச்சா் கயந்த கருணாதிலக்க தலைமை தாங்கி உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்;
“நல்லாட்சி  அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு இந்த நாட்டில்  ஊடக சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளா்களுக்கும் சுதந்திரம் இருக்க வில்லை.
ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டா்கள், ஊடகவியலாளா்களை குண்டர்கள் சென்று அடித்து தாக்கினாா்கள். சிலரை கடந்தினாா்கள். ஊடகவியலாளா்கள் சிலா் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்ந்தாா்கள்.
கடந்த காலத்தில்  அரசுக்கு எதிராக செய்தித் தலைப்பு தீட்டிய ஊடகவியலாளா் அப்பதவியில் இருந்து  துாக்கி எறியப்பட்டா்கள்.  அந்த யுகம் தற்போதைய ஆட்சியில்  இல்லை.
உலகில் உள்ள 180 நாடுகளில்,  ஊடக சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து, இலங்கைக்கு 165ஆவது இடம்  2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தற்பொழுது 140வது இடத்திற்கு இலங்கை முன்னேறியுள்ளது.
இந்த ஆட்சியில் ஊடகவியலாளா்களின் நன்னோக்கு வேலைத்திட்டத்தில் அவா்களுக்கு வீடு வழங்குதல் , உபகரணங்கள் வழங்குதல் மற்றும் மோட்டாா் பைக் வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்கள எமது அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத்திட்டத்தினை நிர்மாணிப்பதற்கும் நிதியமைச்சரின் உதவியை நாடியுள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்