பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு

🕔 May 15, 2016

Maithripala sirisena - 0987ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் செயற்படாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது எதிர்க்கட்சியினர் இணக்கப்பாட்டுடன் போட்டியிட முடியாவிட்டால், தனது தரப்பினரை அன்னப் பறவை சின்னத்தில் களமிறங்கி மஹிந்தவை ஓரங்கட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பிய பின்னரே, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு கடுமையான எச்சரிக்கையை ஜனாதிபதி விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாரா? இல்லையா? என்பது தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து தொடர்ந்தும் இழுபறி நிலையில் இவர்கள் செயற்பட்டால் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அத்தோடு அசௌகரியங்களையும் அவர்கள் சந்திக்க நேரிடும்” என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Comments