பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வி அமைச்சர்

🕔 May 14, 2016

Laxman Kiriella - 0976ல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை குறித்து முறைப்பாடு செய்யப்படும் போது, அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பகிடிவதைக்கு எதிரான சட்டம் மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ளது.

பகிடிவதைக்காக மாணவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்ட திட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்த முறைப்பாடு அவசியம். பெரும்பாலான மாணவர்கள் இது குறித்து முறைப்பாடு செய்ய பின்வாங்குகின்றனர்.

இருப்பினும், தற்போது முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற இலவசக் கல்வி முறைமை கிடையாது.

அதேபோன்று, உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்று மாணவர்களை பகிடிவதை செய்வதும் கிடையாது.

எமது வரலாற்றை நாம் அடிக்கடி மீட்டிப் பார்க்கின்றோம். எமது கலாசாரம், பாரம்பரியம் பற்றி பேசுகின்றோம்.

இருப்பினும், எமது நாட்டைப் போன்று உலகில் எந்தவொரு நாட்டிலும் முதலாம் வருட புதிய மாணவர்களுக்கு இதுபோன்ற பகிடிவதை செய்யப்படுவதில்லை.

இது எமது நாடடுக்கே பாரிய வெட்கக்கேடு” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்