மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு, அரசாங்கம் செலவு; எழுகிறது விமர்சனம்

🕔 May 13, 2016

Mahinda - 055முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உகண்டா பயணத்துக்கான செலவினை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உகண்டா ஜனாதிபதி முசோவெனியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது நெருங்கிய அரசியல்வாதிகள் சிலர் உகண்டாவுக்கு சென்றுள்ளனர்.

இதற்காக முன்னாள் ஜனாதிபதியின் விமானப் பயணத்துக்கான செலவினை அரசாங்கம் வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அந்தரங்க செயலாளர் உதித லொகுபண்டார, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் இது தொடர்பாக எழுத்து மூல கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட அரசாங்கம், கொழும்பு-டுபாய், டுபாய்- எண்டபே (உகண்டா) விமானப் பயணங்களுக்கு, முதல் வகுப்பு விமான டிக்கட்டுகளை கொள்வனவு செய்வதற்காக 04 லட்சத்து 25 ஆயிரம் ரூபாவை ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் தொடர்பில் உரத்துச் சத்தமிடும் தற்போதைய அரசு, அவருக்கு இவ்வாறா வசதிகளையும் செய்து வருவது, பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்