Back to homepage

திருகோணமலை

கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம்

கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம் 0

🕔6.Nov 2023

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3இல் சித்தியெய்திய 499 பேருக்கு இன்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்படி நியமனங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன்,

மேலும்...
கிழக்கு மாகாண பராமரிப்பு இல்லங்களில் 1249 சிறுவர்கள் உள்ளனர்: மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தகவல்

கிழக்கு மாகாண பராமரிப்பு இல்லங்களில் 1249 சிறுவர்கள் உள்ளனர்: மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தகவல் 0

🕔6.Nov 2023

– அபு அலா – கிழக்கு மாகாணத்திலுள்ள 51 சிறுவர் அபிவிருத்தி இல்லங்களில் 1204 பிள்ளைகளும், 04 அரச பாதுகாப்பு இல்லங்களில் 45 பிள்ளைகளும் பராமரிக்கப்படுவதாக கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தெரிவித்தார். உலக சிறுவர் தினத்தையொட்டி ‘எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்’ எனும் தொனிப்பொருளில்

மேலும்...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் 0

🕔1.Nov 2023

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று (01) கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் – அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் நாளை திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரம் ஆலயத்தில் – பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல

மேலும்...
நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம்

நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம் 0

🕔21.Oct 2023

– அஹமட் – மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் எம்.எம். அப்துல்லாஹ் – திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். நீதிபதி அப்துல்லாஹ்வுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (20) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நீதிபதி அப்துல்லாஹ் தனது இளமைப் பருவத்தில் அல் ஹாபிழ்

மேலும்...
வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு 0

🕔15.Oct 2023

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கின்றமை தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்றினை – மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை தத்தமது பாடசாலை மாணவர்களுக்கு, பாடசாலை நேரத்துக்கு அப்பால் அல்லது வார இறுதி நாட்களில் பணம் வசூலித்து கற்பிப்பது, இந்த சுற்றறிக்கை மூலம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த

மேலும்...
மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம்

மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம் 0

🕔14.Oct 2023

– றிப்தி அலி – ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கலாநிதி செனரத் ஹேவகே, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்புச் செயலாளராக செயற்படுகின்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது. கடந்த 2022 பெப்ரவரி 10ஆம் திகதி புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்

மேலும்...
கிழக்கு ஆளுநர் சுற்றுநிருபத்தை மீறி தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 21 பேரை நியமித்துள்ளமை அம்பலம்: அவர்களில் ஒருவர் மட்டுமே கிழக்கத்தவர்

கிழக்கு ஆளுநர் சுற்றுநிருபத்தை மீறி தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 21 பேரை நியமித்துள்ளமை அம்பலம்: அவர்களில் ஒருவர் மட்டுமே கிழக்கத்தவர் 0

🕔12.Oct 2023

– றிப்தி அலி – ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தினை மீறி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தனது தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக 21 பேரை நியமித்துள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரிய வந்துள்ளது. கடந்த 2018.10.12ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட பீஎஸ்/சீஎஸ்ஏ/00/1/4/2ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் பிரகாரம் ஆளுநரின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக 15

மேலும்...
கிழக்கில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க ஆளுநர் அனுமதி

கிழக்கில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க ஆளுநர் அனுமதி 0

🕔25.Sep 2023

கிழக்கு மாகாணத்தில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (25) வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க – மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு இன்று ஆளுநர் கையொப்பமிட்டு அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும்...
திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி 0

🕔24.Sep 2023

புல்மோட்டை  – அரிசிமலை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை அபரிக்கும் முயற்சியில் அங்குள்ள பனாமுரே திலகவங்ச என்ற தேரர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (22) குறித்த தேரர், அவரது சகோதரருடன் அந்த பிரேதசத்திற்குச் சென்று, டோசர் இயந்திரங்களைக் கொண்டு காணிகளை அபரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு அட்டகாசம் செய்துள்ளார். இதன்போது

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்: பிக்குகள் களத்தில்

கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்: பிக்குகள் களத்தில் 0

🕔19.Sep 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும்  போராட்டத்தை கிழக்கின் பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று (19) காலைமுதல் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடங்கியது. திருகோணமலை – நிலாவெளி பகுதியிலுள்ள பெரியகுளம் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிப்பதை தவிர்க்குமாறு,

மேலும்...
திலீபனின் நினைவு ஊர்வலத்தை சிங்களப் பிரதேசம் ஊடாக கொண்டு சென்றமை நல்லிணக்கத்துக்கு குந்தகமான செயல்: கிழக்கு ஆளுநர் செந்தில் கண்டனம்

திலீபனின் நினைவு ஊர்வலத்தை சிங்களப் பிரதேசம் ஊடாக கொண்டு சென்றமை நல்லிணக்கத்துக்கு குந்தகமான செயல்: கிழக்கு ஆளுநர் செந்தில் கண்டனம் 0

🕔19.Sep 2023

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் – நாடாளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றமை இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்கும் செயல் என, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔18.Sep 2023

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது  செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் சந்தேக நபர்கள் இன்று (18) ஆஜர்செய்ப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி சந்தேக நபர்கள் எதிர்வரும்

மேலும்...
விகாரை அமைப்புக்கு அனுமதி கிடையாது: பிக்குகள் முன்னிலையில் மீண்டும் உறுதி செய்தார் கிழக்கு ஆளுநர்

விகாரை அமைப்புக்கு அனுமதி கிடையாது: பிக்குகள் முன்னிலையில் மீண்டும் உறுதி செய்தார் கிழக்கு ஆளுநர் 0

🕔28.Aug 2023

திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்து,

மேலும்...
சீனன்குடாவில் விமான விபத்து: இருவர் பலி

சீனன்குடாவில் விமான விபத்து: இருவர் பலி 0

🕔7.Aug 2023

திருகோணமலை – சீனக்குடாவில் உள்ள இலங்கை விமானப்படை பயிற்ச்சி வான்வெளியில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பயிற்சியளிப்பவரும் யயிற்சி பெறுபவரும் உயிரிழந்துள்ளதாக ஊடக விமானப்படையின் பணிப்பாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். பிரி (PT) 6 ரக விமானம் இன்று காலை வான்

மேலும்...
சுழியோடியாக மாறிய கிழக்கு சுற்றுலா பணியக தலைவர் மதன்: கடலின் கீழுள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார்

சுழியோடியாக மாறிய கிழக்கு சுற்றுலா பணியக தலைவர் மதன்: கடலின் கீழுள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார் 0

🕔24.Jul 2023

திருகோணமலை சுற்றுலா பிரதேசங்களில் – கடலி கீழ் குவிந்துள்ள மாசுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று இன்று (24) மேற்கொள்ளப்பட்ட போது, கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஏ.பி. மதனும் அந்தப் பணியில் ஒரு சுழியோடியாக மாறி இணைந்து கொண்டார். சுற்றுலாத் துறைக்கு சேதம் விளைவிக்கும் மாசுப்பொருட்கள் தொடர்பில், திருகோணமலை மாவட்ட ஹோட்டல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்