விமான நிலையம் வந்த பெண்ணின் தங்க நகைகளைத் திருடிய ஊழியர் சிக்கினார்

விமான நிலையம் வந்த பெண்ணின் தங்க நகைகளைத் திருடிய ஊழியர் சிக்கினார் 0

🕔30.Sep 2023

வெளிநாடு செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பாதுகாப்புப் பரிசோதகர் ஆவார். விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் மினுவாங்கொட

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது 0

🕔30.Sep 2023

– சர்ஜுன் லாபீர் – தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் எதிர்வரும் ஒக்டோபர் 24,25ம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். ஒக்டோபர் 24ம் திகதி – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது 0

🕔30.Sep 2023

மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம். தர்மசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட மூவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும், பிபில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் பிபில பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவில

மேலும்...
ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள் அதிகரிப்பு: நீங்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள் அதிகரிப்பு: நீங்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? 0

🕔30.Sep 2023

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களினுடைய வீடியோகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டணச் சந்தா அடிப்படையிலான இணையத்தளங்கள் உட்பட முன்னணி ஆபாச இணையத்தளங்களில் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை தம்பதிகளினுடைய காணொளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன. இவ்வாறான வீடியோக்களில் இலங்கை ஆபாச நட்சத்திரங்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் உதவியுடன் எடுக்கப்பட்டவை இடம்பெற்றுள்ளன. அவற்றில பெரும்பாலானவை தம்பதிகளின்

மேலும்...
“வரலாற்றில் நீதவான் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்”: நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சுமந்திரன் கோபம்

“வரலாற்றில் நீதவான் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்”: நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சுமந்திரன் கோபம் 0

🕔29.Sep 2023

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் சிங்கள மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மானிப்பாய் சுதுமலை

மேலும்...
பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: கிழக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு பிரதமர் சாதக பதில்

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: கிழக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு பிரதமர் சாதக பதில் 0

🕔28.Sep 2023

கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்கிழமை (26) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில்

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு 0

🕔28.Sep 2023

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் ஒக்டோபர் 02 ஆம் திகதி அறிவிக்கப்படும் என, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க கூறியுள்ளார். திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த

மேலும்...
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன?

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன? 0

🕔28.Sep 2023

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றமற்றவர் என நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில், பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன் போதே இந்த தீர்ப்பை நிவ் சௌத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றம்

மேலும்...
இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔27.Sep 2023

இலங்கையில் இன்று (27) இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. 2019 ஆம் ஆண்டு ரத்மலான கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலில் 152

மேலும்...
12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது

12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது 0

🕔27.Sep 2023

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த 05 பேரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்துள்ளனர். . துபாயிலிருந்து இலங்கை்கு இரண்டு விமானங்களில பயணித்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும்

மேலும்...
தேசிய மட்ட சுனாமி ஒத்திகைப் பயிற்சி பற்றிய அறிவித்தல்: பீதியடைய வேண்டாம் எனவும் கோரிக்கை

தேசிய மட்ட சுனாமி ஒத்திகைப் பயிற்சி பற்றிய அறிவித்தல்: பீதியடைய வேண்டாம் எனவும் கோரிக்கை 0

🕔27.Sep 2023

சுனாமி ஒத்திகைப் பயிற்சி தேசிய மட்டத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த ஒத்திகைப் பயிற்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, இதுவொாரு பரீட்சார்த்த சுனாமி ஒத்திகைப் பயிற்சி நடவடிக்கை என்பதனாால், இதுதொடர்பான செய்திகளைக் கேள்வியுற்று பொதுமக்கள் பதட்டமோ, பீதியோ அடையத்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை 0

🕔27.Sep 2023

சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியொன்றை பொருத்திய (assembling) குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. காலி பிரதான நீதவான் இந்தப் பிணை உத்தரவை வழங்கியுள்ளார். இதன்படி, அவர் தலா 05 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும், 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை,

மேலும்...
வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்:  மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்: மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு 0

🕔26.Sep 2023

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும்

மேலும்...
ஒரு மில்லியன் நபராக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு

ஒரு மில்லியன் நபராக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு 0

🕔26.Sep 2023

இலங்கைக்கு இவ்வருடம் வருகை தந்தை வெளிநாட்டிச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) ஒரு மில்லியனை எட்டியுள்ளது. அந்த வகையில் தனது குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (26) வந்தடைந்த ரஷ்ய பிரஜையான அலெக்ஸ் மஸ்கோவ், இலங்கையின் ஒரு மில்லியன் சுற்றுலா பயணியாக வரவேற்கப்பட்டார். இந்த மைல்கல்லை கொண்டாடும் வகையில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

மேலும்...
நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு

நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு 0

🕔26.Sep 2023

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்16 நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.  அவற்றில் 06 நில அதிர்வுகள் புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.  மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், நேற்றிரவு மொனராகலை – புத்தல பகுதியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்