ஒரு மில்லியன் நபராக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு
🕔 September 26, 2023




இலங்கைக்கு இவ்வருடம் வருகை தந்தை வெளிநாட்டிச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) ஒரு மில்லியனை எட்டியுள்ளது.
அந்த வகையில் தனது குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (26) வந்தடைந்த ரஷ்ய பிரஜையான அலெக்ஸ் மஸ்கோவ், இலங்கையின் ஒரு மில்லியன் சுற்றுலா பயணியாக வரவேற்கப்பட்டார்.
இந்த மைல்கல்லை கொண்டாடும் வகையில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ஒரு சிறப்பு விழாவை ஏற்பாடு செய்தது.
அலக்ஸ் மஸ்கோவ் மற்றும் அவரின் குடும்பத்தினரை அதிகாரிகள் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், மாலைகள் அணிவித்து நினைவுப் பரிசுகளும் வழங்கினர்.


Comments



