12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது

🕔 September 27, 2023

ட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த 05 பேரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்துள்ளனர். .

துபாயிலிருந்து இலங்கை்கு இரண்டு விமானங்களில பயணித்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் 120 மில்லியன் ரூபா பெறுமதியான 06 கிலோ தங்க பிஸ்கட் மற்றும் நகைகளுடன் கைதாகியுள்ளனர்.

இவர்களில் மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் இன்று அதிகாலை 01.10 மணியளவில் துபாயில் இருந்து இலங்கை வந்தனர். மற்றைய பெண் காலை 05.25 மணியளவில் இலங்கை வந்துளார்.

இவர்களின் உடலிலும், அவர்கள் எடுத்துச் சென்ற கைப் பொதிகளிலும் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமையை இதன்போது சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு அடிக்கடி விமானங்களில் செல்வதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Comments