போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம்

🕔 April 27, 2024

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாட்டில் 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நச்சுத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவே, இவ்வாறு போதை மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 3,63,438 போதை மாத்திரைகளைபொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்