தலைப்புச் செய்திகள்

தன்னைப் பற்றி பரப்பப்படும் ‘போலி பிரசாரம்’ குறித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விளக்கம்

தென்கொரியாவுக்கு தான் இடம்பெயரவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தச் செய்தியை நிராகரித்துள்ளார்.

எந்தவொரு நாட்டுக்கும் இடம்பெயரும் திட்டம் தனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் எதிரிகளால் கூறப்படும் ‘பொய்ப் பிரசாரம்’ என, இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு எதிராக நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை – கம்பஹா மாநகர சபை மைதானத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.