தேசிய மட்ட சுனாமி ஒத்திகைப் பயிற்சி பற்றிய அறிவித்தல்: பீதியடைய வேண்டாம் எனவும் கோரிக்கை

🕔 September 27, 2023

சுனாமி ஒத்திகைப் பயிற்சி தேசிய மட்டத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த ஒத்திகைப் பயிற்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இதுவொாரு பரீட்சார்த்த சுனாமி ஒத்திகைப் பயிற்சி நடவடிக்கை என்பதனாால், இதுதொடர்பான செய்திகளைக் கேள்வியுற்று பொதுமக்கள் பதட்டமோ, பீதியோ அடையத் தேவையில்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சுனாமி அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது பொதுமக்கள், அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் இதன்போது பயிற்சி வழங்கப்படும்.

Comments