விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை
சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியொன்றை பொருத்திய (assembling) குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
காலி பிரதான நீதவான் இந்தப் பிணை உத்தரவை வழங்கியுள்ளார்.
இதன்படி, அவர் தலா 05 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும், 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த வழக்கு 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி அழைக்கப்படும் என மன்று அறிவித்துள்ளது.