நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு

🕔 September 26, 2023

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்16 நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன. 

அவற்றில் 06 நில அதிர்வுகள் புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. 

மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், நேற்றிரவு மொனராகலை – புத்தல பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியிருந்தது.

இது ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்