கிழக்கில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க ஆளுநர் அனுமதி

🕔 September 25, 2023

கிழக்கு மாகாணத்தில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (25) வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க – மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு இன்று ஆளுநர் கையொப்பமிட்டு அனுமதி வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் கடந்த காலத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவும், கல்வி துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கிலும் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்