வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

🕔 October 15, 2023

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கின்றமை தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்றினை – மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை தத்தமது பாடசாலை மாணவர்களுக்கு, பாடசாலை நேரத்துக்கு அப்பால் அல்லது வார இறுதி நாட்களில் பணம் வசூலித்து கற்பிப்பது, இந்த சுற்றறிக்கை மூலம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்களைக் கண்காணிக்க வட்டாரக் கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், பாட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாடசாலை கண்காணிப்பு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்கள் குறித்து பெற்றோர் முறைப்பாடு வழங்க வேண்டுமாயின், மாகாண கல்வி அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவுக்கு அல்லது 24 மணிநேரமும் இயங்கும் ஆளுநரின் பொது முறைப்பாடுகள் பணியகத்தின் 026 7500 500 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்