சற்று முன்னர்: இஸ்ரேல் தலைநகரில் சைரன்கள் அலறுகின்றன: பதிலடி நடத்துவதாக ஹமாஸ் ரணுவப் பிரிவு தெரிவிப்பு
இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சைரன்கள் அலறுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிப்பதாக சற்று முன்னர் (20 நிமிடங்களுக்கு முன்னர்) அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லமைக்குப் பதிலடியாக, இஸ்ரேல் தலைநகரத்தின் மீது ரொக்கர்களை ஏவியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல் -கஸ்ஸாம் பிரிகேட்ஸ் தெரிவித்துள்ளது.
காயங்கள் அல்லது சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
மிகவும் பெருமிதம் கொண்டவர்கள்
இது இவ்வாறிருக்க, தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறுவதை எதிர்பார்க்காத பாலஸ்தீனர்களுக்கு – ஒரு நிரந்தர தீர்வு இருக்க வேண்டும் என்று, தோஹா பட்டப்படிப்புக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (Doha Institute for Graduate Studies) பொதுக் கொள்கை பேராசிரியரான டேமர் கர்மவுட் தெரிவித்துள்ளார்.
“பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை. பாலஸ்தீனியர்கள் மிகவும் பெருமிதம் கொண்டவர்கள்” என்று அல் ஜசீராவிடம் அவர் கூறியுள்ளார்.
“பாலஸ்தீனம் அவர்களின் தாயகம். அவர்கள் அந்த மண்ணின் பூர்வீகவாசிகள். அவர்கள் வேறு எந்த நாட்டிலும் அகதிகளாக இருக்க விரும்பவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.