கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

🕔 September 18, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது  செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் சந்தேக நபர்கள் இன்று (18) ஆஜர்செய்ப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

இதன்படி சந்தேக நபர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்படவுள்ளனர்.

திருகோணமலை – கொழும்பு வீதியினூடாக வாகனம் ஒன்றில் புலிகளின் முன்னாள் உறுப்பினர் மறைந்த திலீபனின் உருவ சிலையை கொண்டு சென்ற போது, சர்தாபுர பகுதியில் வைத்து வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் வாகனத்தில் வந்த நபர்களை தாக்கியதாகவும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை,  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது 06 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

தொடர்பான செய்தி: கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்