விகாரை அமைப்புக்கு அனுமதி கிடையாது: பிக்குகள் முன்னிலையில் மீண்டும் உறுதி செய்தார் கிழக்கு ஆளுநர்

🕔 August 28, 2023

திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்து, அனுமதி மறுத்துள்ளார்.

இந்நிலையில் பிரதேச செயலகத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்ட காரர்களால் இக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.

“திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் பகுதியாகும். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்களே ஒரு முன்னுதாரணமாக இருப்பீர்கள்” என இதன்போது ஆளுநர் கூறினார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,

பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த கட்டுமான வேலைகளையும் முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

(ஆளுநரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்