நீதிபதியின் இல்லத்தில் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு
மாத்தறை மாவட்ட நீதிபதியின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலத்தை இன்று (28) காலை மாத்தறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த பந்துல புஷ்பகுமார (வயது 55) நேற்றிரவு மாத்தறை கடற்கரை வீதியிலுள்ள மாவட்ட நீதிபதியின் இல்லத்தில் கடமையாற்றியிருந்த நிலையில், இன்று காலை கடமையில் இருந்து விடுபடவிருந்தார்.
இது தற்கொலையா அல்லது தவறான சம்பவமா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாதோடு, இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் எறு கூறியுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின் போது, சம்பவ இடத்தில் கிடந்த இரண்டு வெற்று தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.