குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு 0

🕔20.Feb 2023

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜூன் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (20) உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தேசிய பலசேனா அமைப்பு

மேலும்...
உங்கள் மின் கட்டணம் எவ்வளவு வரும் என தெரிந்து கொள்ளுங்கள்: கணக்கிட ஒரு இணையத்தளம்

உங்கள் மின் கட்டணம் எவ்வளவு வரும் என தெரிந்து கொள்ளுங்கள்: கணக்கிட ஒரு இணையத்தளம் 0

🕔20.Feb 2023

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் படி, பொதுமக்கள் தங்களின் மின்கட்டணம் தொடர்பான விவரங்களை https://eleccal.numbers.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் இப்போது கணக்கிட்டுக் கொள்ள முடியும். இந்த இணையத்தள கணக்கீட்டின் படி, 90 அலகுகளுக்கான திருத்தப்பட்ட மின் கட்டணம் ரூ. 4,543 ரூபா 59 சதமாகும். தற்போது 90 அலகுகளுக்கான கட்டணம் 1846 ரூபா 15 சதமாகும். கடந்த

மேலும்...
உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு 0

🕔20.Feb 2023

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி தேர்தலை நடத்த முடியாதென ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு

மேலும்...
இணைந்த வடகிழக்கு சாத்தியமாகும் போது, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்கள் தமிழர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி

இணைந்த வடகிழக்கு சாத்தியமாகும் போது, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்கள் தமிழர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி 0

🕔20.Feb 2023

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான இணைந்த வட, கிழக்கென்பது சாத்தியமாகும் போது – திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபை தேர்தல் – 2023 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள் அறிமுகத்துடனான தேர்தல்

மேலும்...
தேசிய கபடி அணி தலைவராக வரலாற்றில் முதன்முறை தெரிவாகியுள்ள முஸ்லிம் வீரர்; நிந்தவூர் அஸ்லம் சஜா: தடைகளும், சாதனைகளும்

தேசிய கபடி அணி தலைவராக வரலாற்றில் முதன்முறை தெரிவாகியுள்ள முஸ்லிம் வீரர்; நிந்தவூர் அஸ்லம் சஜா: தடைகளும், சாதனைகளும் 0

🕔20.Feb 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக – வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணம் – நிந்தவூரைச் சேர்ந்த 25 வயது எம்.ரி.அஸ்லம் சஜா என்பவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய கபடி அணியின் தலைவராக – இதற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல் 0

🕔20.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னரே பரிசீலனைக்கு அழைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை என மனுதாரரின் சட்டத்தரணிகள் இன்று (20) உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற ராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர

மேலும்...
கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பெண்கள் குறித்து, சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு எச்சரிக்கை

கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பெண்கள் குறித்து, சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு எச்சரிக்கை 0

🕔19.Feb 2023

கொழும்பின் வீதிகளில் சிறு குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பல பெண்கள் போதைக்கு அடிமையானவர்கள் என, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுடன் பெண் பிச்சைக்காரர்களுக்கு யூடியூப் சேனல்கள் மற்றும் ஃபேஸ்புக் மூலம் விளம்பரம் அளிக்கப்படுவதால், பல பெண்கள் இந்த பாதைக்கு திரும்பும் போக்கு காணப்படுவதாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப்

மேலும்...
பள்ளிவாசல்களில் உலக அறிவும்,  வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை

பள்ளிவாசல்களில் உலக அறிவும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை 0

🕔19.Feb 2023

பள்ளிவாசல்களில் ஆத்மீகக் கல்வி மட்டுமன்றி – உலக அறிவுடன், இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுவது அவசியம் என, அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் ‘கிழக்கின் கேடயம்’ அமைப்பின் தலைவருமான எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தினார். அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இன்று (19) நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரி 66ஆவது பாரயன நிகழ்வுடன் கூடிய

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ

உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்பதால் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் வற்புறுத்தப்படுவார்கள் என்றார். “ஊடகச் செய்திகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம் 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் காலத்தில், பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு கோரப்பட்டிருந்த போதிலும், வாக்களிப்பு பிற்போடப்பட்டமையால் கோரப்பட்ட வேட்பு மனுக்களுக்கே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின்

மேலும்...
உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்கிறது தேர்தல் ஆணைக்குழு

உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்கிறது தேர்தல் ஆணைக்குழு 0

🕔18.Feb 2023

உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லாமை, போதுமான வாக்குச் சீட்டுக்களை அரச அச்சகத் திணைக்களம் அச்சிடாமை, தேர்தல் கடமைகளுக்கு போதுமான

மேலும்...
விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மயில், குரங்கு உள்ளிட்ட 06 விலங்குகளை கொல்ல முடியும்: விவசாய அமைச்சர்

விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மயில், குரங்கு உள்ளிட்ட 06 விலங்குகளை கொல்ல முடியும்: விவசாய அமைச்சர் 0

🕔17.Feb 2023

பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (16) தெரிவித்தார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின் போது, குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல் பயிர்களை நாசம் செய்வது குறித்து அமைச்சரிடம் முறையிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் பயிர்களை அழிக்கும் 06 விலங்குகள் பயிர்களை

மேலும்...
தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு

தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு 0

🕔17.Feb 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது, தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் கடினம் என, நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருக்கிறார். நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று (16) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆணைக்குழுவுக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமை 7 வருடங்களுக்கு ரத்து; 06 மாதம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமை 7 வருடங்களுக்கு ரத்து; 06 மாதம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Feb 2023

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமையை ஏழு வருடங்களுக்கு இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு 06 மாத சிறைத்தண்டனையும் 500 ரூபா அபராதமும் விதிக்கப்படுவதாகவும் – மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு: காரணமும் வெளியானது

உள்ளூராட்சி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு: காரணமும் வெளியானது 0

🕔17.Feb 2023

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது எனவும், அதற்கான உத்தியோகபூர்வ திகதிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்