உங்கள் மின் கட்டணம் எவ்வளவு வரும் என தெரிந்து கொள்ளுங்கள்: கணக்கிட ஒரு இணையத்தளம்

🕔 February 20, 2023

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் படி, பொதுமக்கள் தங்களின் மின்கட்டணம் தொடர்பான விவரங்களை https://eleccal.numbers.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் இப்போது கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

இந்த இணையத்தள கணக்கீட்டின் படி, 90 அலகுகளுக்கான திருத்தப்பட்ட மின் கட்டணம் ரூ. 4,543 ரூபா 59 சதமாகும். தற்போது 90 அலகுகளுக்கான கட்டணம் 1846 ரூபா 15 சதமாகும். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இதே அலகு பாவனைக்கு 861 ரூபா அறவிடப்பட்டது.

இதேவேளை 90 யூனிட் பயன்படுத்திய பிறகு ஒரு யூனிட்டை கூடுதலாக பயன்படுத்தினால், மின்சார கட்டணம் 923 ரூபாப 08 சதம் அதிகமாக செலுத்த வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்