குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

🕔 February 20, 2023

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜூன் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (20) உத்தரவிட்டார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தேசிய பலசேனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, குர்ஆன் மற்றும் இஸ்லாம் மார்க்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றில் இன்று முன்னிலையாகாத 5ஆவது சந்தேகநபருக்கு இன்று பிடியானை பிறப்பிக்கப்பட்டது.

Comments