லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைகிறது

🕔 May 2, 2024

லிட்ரோ நிறுவனம் – எரிவாயு விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது 4,115 ரூபாயாக உள்ள 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை 4,000 ரூபாய்க்கு கீழ் கொண்டு வரப்படும் என – லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவிதுள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாளை மே 03 விலை குறைப்பை அறிவிக்கும் என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 01ஆம் திகதியும் லிட்ரோ நிறுவனம் – எரிவாயுவின் விலையைக் குறைத்திருந்தது.

அதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலையை 135 ரூபாயினால் லிட்ரோ நிறுவனம் குறைத்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்