தலைப்புச் செய்திகள்

ஐக்கி மக்கள் சக்தியில் நான் இணையவில்லை: மே தின மேடையில் ஏறிவிட்டு அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு

க்கிய மக்கள் சக்தியில் தான் இணைந்ததாக அண்மையில் வெளியான செய்திகளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க நிராகரித்துள்ளார்.

தலவாக்கலை பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய மே தின நிகழ்வில் அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்ட நிலையில், அவர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.

இருந்த பொதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் விடுத்த அழைப்பின் பேரில் – குறித் நிகழ்வில் தான் பங்குபற்றியதாகவும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இணைந்து கொண்டதாக வியாக்கியானம் செய்ய வேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.