தலைப்புச் செய்திகள்

லிட்ரோ எரிவாயு: குறைக்கப்பட்ட விலை விபரம் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 175 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 3,940 ரூபாயாகும். 05 கிலோ சிலிண்டரின் விலை 70 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,582 ரூபாய்.

2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 32 ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 740 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று (03) நள்ளிரவு தொடக்கம் விலைக் குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.