லிட்ரோவை விடவும் அதிகளவில், லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையைக் குறைத்தது

🕔 May 3, 2024

லிட்ரோ நிறுவனம் எரிவாயுவுக்கான விலையைக் குறைத்துள்ள நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுக்கான விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,840 ரூபாய்.

05 கிலோ சிலிண்டரின் விலை 110 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 1,542 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விலை அறிவிப்பின்படி, லிட்ரோ எரிவாயுவின் விலையை விடவும், லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (03) நள்ளிரவுக்கு இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருகிறது.

தொடர்பான செய்தி: லிட்ரோ எரிவாயு: குறைக்கப்பட்ட விலை விபரம் அறிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்