உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல்

🕔 February 20, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னரே பரிசீலனைக்கு அழைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை என மனுதாரரின் சட்டத்தரணிகள் இன்று (20) உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற ராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர – மேற்படி மனுவை சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த மனுவை – முன்பு திட்டமிட்டபடி வரும் 23ஆம் திகதி அழைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், 23ஆம் திகதிக்கு முன்னர் இந்த மனுவை பரிசீலனை செய்யுமாறு மனுதாரர் சார்பில் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆயினும் தபால்மூல வாக்களிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையினால் மனுவை முன்கூட்டி அழைக்க வேண்டிய அவசியமில்லாமல் போயுள்ளது.

22,23 மற்றும் 24ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

Comments