உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ

🕔 February 19, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்பதால் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் வற்புறுத்தப்படுவார்கள் என்றார்.

“ஊடகச் செய்திகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என ஊடகங்கள் செய்திகளை வெளியிடும். பின்னர் தேர்தல் நடத்தப்படும் என மற்றுமொரு செய்தியைக் கூறும். எனவே இது விடயத்தில் ஊடகங செய்திகளைப் புறக்கணிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை எப்படியாவது நடத்த அதிகாரிகளை வற்புறுத்துவோம். அதற்காக அமைதியாக தெருவில் இறங்கி போராடுவோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி அதன் தேர்தல் பிரச்சாரத்தை தொடரந்து மேற்கொள்ளும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்