முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமை 7 வருடங்களுக்கு ரத்து; 06 மாதம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

🕔 February 17, 2023

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமையை ஏழு வருடங்களுக்கு இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவருக்கு 06 மாத சிறைத்தண்டனையும் 500 ரூபா அபராதமும் விதிக்கப்படுவதாகவும் – மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலுக்கு 42 லட்சம் ரூபா லஞசம் வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மயோன் முஸ்தபா லஞ்சம் வழங்கிய போது பதிவான வீடியோ காட்சிகள், அந்த சமயத்தில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்