உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்கிறது தேர்தல் ஆணைக்குழு

🕔 February 18, 2023

ச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லாமை, போதுமான வாக்குச் சீட்டுக்களை அரச அச்சகத் திணைக்களம் அச்சிடாமை, தேர்தல் கடமைகளுக்கு போதுமான எரிபொருள் வழங்கல் இல்லாமை போன்றவற்றுக்கு இந்த மனுவின் ஊடாக தீர்வினைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்