Back to homepage

Tag "கொழும்பு மேல் நீதிமன்றம்"

நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை

நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை 0

🕔24.Nov 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர் 06 பேருக்கு 12 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத்தண்டனையினை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. நபரொருவரை தெமட்டகொட பிரதேசத்திலிருந்து கடத்திச் சென்ற குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்டமையினை அடுத்து, மேற்படி ஆறு பேருக்கும் இந்தத் தண்டனையினை, நீதிபதி ஆர். குருசிங்க விதித்தார்.

மேலும்...
தொழில் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கிய முன்னாள் பிரதியமைச்சருக்கு 04 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தொழில் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கிய முன்னாள் பிரதியமைச்சருக்கு 04 ஆண்டுகள் சிறைத் தண்டனை 0

🕔3.Nov 2017

அரச தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்ட, முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரட்னவுக்கு 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரணசிங்க இந்த தீர்ப்பினை நேற்று வியாழக்கிழமை வழங்கினார். இதேவேளை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அந்த

மேலும்...
லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை

லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை 0

🕔20.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையினை இன்று புதன்கிழமை வழங்கியுள்ளது. மேற்படி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கான தண்டனையினை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் அவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். இந்த

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை 0

🕔7.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக, பௌத்த சமய நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான ‘சில்’

மேலும்...
மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை 0

🕔29.Aug 2017

மாணவர் ஒருவரை தரம் ஒன்றுக்கு வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, லஞ்சம் பெற்ற முன்னாள் அதிபர் ஒருவருக்கு 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று செவ்வாய்கிழமை மேற்படி தண்டனையினை விதித்து தீர்ப்பளித்தது. பாணந்துறையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக, குறித்த அதிபர் 25,000 ரூபா பணத்தை

மேலும்...
நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு

நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு 0

🕔25.May 2017

நிதி மோசடி தொடர்பான வழக்கில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் இன்று செய்யப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, நிதி பெற்றுக் கொண்டமைக்கான உரிய ஆவணங்களை வௌிப்படுத்தாமல், பொரளை – கின்ஸி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு

மேலும்...
விமலின் பிணை மனு நிராகரிப்பு

விமலின் பிணை மனு நிராகரிப்பு 0

🕔21.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் திருத்தப்பட்ட பிணை மனுவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை நிராகரித்தது. அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கோட்டே நீதிமன்றம் தன்னை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமைக்கு எதிராக, விமல வீரவன்ச சார்பில், மேற்படி திருத்தப்பட்ட பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற

மேலும்...
கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு

கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔15.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற பதவியை வகிக்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில், சட்ட மா அதிபர் சார்பாக நேற்று செவ்வாய்கிழமை ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜனரல் ஜனக டி. சில்வா இதனைக் கூறியுள்ளார். கீதா குமாரசிங்க, இரட்டைப் பிரஜா உரிமையினைக் கொண்டுள்ளமையினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாதென சட்ட

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு

தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு 0

🕔16.Feb 2017

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாரேஹேன்பிட்டி பொலிஸ் நிலைய, குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்யதிலக இதற்கான உத்தரவை வழங்கினார். ஒரு லட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், 10

மேலும்...
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே 0

🕔5.Dec 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அப்போதை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறி, போலி ஆவணமொன்றினைத் தயாரித்து, அதை வெளிப்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட திஸ்ஸ

மேலும்...
பியசேனவுக்கு பிணை; 05 மாதங்களின் பின்னர் வெளியில் வந்தார்

பியசேனவுக்கு பிணை; 05 மாதங்களின் பின்னர் வெளியில் வந்தார் 0

🕔21.Nov 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன  இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்துக்குரிய வாகனத்தினை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் ஜுலை மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட பியசேன, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமையினை அடுத்து, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு

மேலும்...
கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு

கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு 0

🕔31.Oct 2016

நபரொருவரை கொலை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஐவருக்கு, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொழும்பு – மாளிகாகந்த பகுதியில் 2001 ஆம் ஆண்டு, நபரொவருவரை இவர்கள் கொலை செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதன்போது, சந்தேக

மேலும்...
வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔25.Oct 2016

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று செவ்வாய்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ரவீந்திரன் சுரேந்திரன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு, 06 வயதுடைய சிறுமியொருவரை, மேற்படி நபர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். சம்பவம் நடைபெற்ற போது, குற்றவாளி 18

மேலும்...
ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்க மறியல்

ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்க மறியல் 0

🕔19.Oct 2016

ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளரும், முன்னைநாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவை, எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில், பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில்

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு 0

🕔26.Sep 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கையெழுத்திட்டதாக குறிப்பிடப்பட்ட போலி ஆவணமொன்றை தயாரித்து வெளியிட்டமை தொடர்பாகவே திஸ்ஸ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்