நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு

🕔 May 25, 2017

நிதி மோசடி தொடர்பான வழக்கில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் இன்று செய்யப்பட்டது.

கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, நிதி பெற்றுக் கொண்டமைக்கான உரிய ஆவணங்களை வௌிப்படுத்தாமல், பொரளை – கின்ஸி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்தார் என, மஹிந்தானந்த அளுத்கமகே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக 27 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, முன்வைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் மஹிந்தானந்த அளுத்கமகேயை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தார்

இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 05 இலட்சம் ரூபா பெறுமதியுடைய இரண்டு சரீரப் பிணையிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

Comments