தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு

🕔 February 16, 2017

Thajudeen - 0987பிரபல றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாரேஹேன்பிட்டி பொலிஸ் நிலைய, குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்யதிலக இதற்கான உத்தரவை வழங்கினார்.

ஒரு லட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையிலும் இவரை விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவு வழங்கினார்.

இதேவேளை, மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில், குற்றப் புலனாய்வு பிரிவில் சந்தேக நபர் ஆஜராக வேண்டுமெனவும் நீதிபதி கட்டளையிட்டார்.

மேலும், இவரின் கடவுச் சீட்டை முடக்கிய நீதிமன்றம், சாட்களை அச்சுறுத்தவோ, விசாரணைகளுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தவோ கூடாதெனவும் எச்சரித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்