வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு 0
வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் அங்குள்ள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் உறுதியளித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய