நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு

🕔 September 26, 2016

thissa-attanayaka-011க்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கையெழுத்திட்டதாக குறிப்பிடப்பட்ட போலி ஆவணமொன்றை தயாரித்து வெளியிட்டமை தொடர்பாகவே திஸ்ஸ அத்தநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்க மீது சட்டமா அதிபரால் மூன்று குற்றங்களின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்க தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்