கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு

🕔 October 31, 2016

death-sentence-08பரொருவரை கொலை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஐவருக்கு, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

கொழும்பு – மாளிகாகந்த பகுதியில் 2001 ஆம் ஆண்டு, நபரொவருவரை இவர்கள் கொலை செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதன்போது, சந்தேக நபர்கள் ஐவரையும் குற்றவாளிகளாகக் கண்ட நீதிபதி பத்மினி என். ரணவக்க, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

திருச்செல்வம் நிகொலஸ், வடிவேல் ரவீந்திரன், தினேஷ் குமார், சின்னத்தம்பி மற்றும் ரவி எனப்படுவோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Comments