வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

🕔 October 25, 2016

death-sentence-08சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று செவ்வாய்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ரவீந்திரன் சுரேந்திரன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு, 06 வயதுடைய சிறுமியொருவரை, மேற்படி நபர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். சம்பவம் நடைபெற்ற போது, குற்றவாளி 18 வயதுடையவராக இருந்தார்.

இந்த நிலையிலேயே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்த்தன, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் சந்தேக நபராகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றொருவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த சிறுமியின் சடலம், சம்பவம் நடைபெற்ற தினமன்று, கிருலப்பனையிலுள்ள கால்வாயிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்