தொழில் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கிய முன்னாள் பிரதியமைச்சருக்கு 04 ஆண்டுகள் சிறைத் தண்டனை

🕔 November 3, 2017

ரச தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்ட, முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரட்னவுக்கு 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரணசிங்க இந்த தீர்ப்பினை நேற்று வியாழக்கிழமை வழங்கினார்.

இதேவேளை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி கிராமத்துப் பெண்ணிடமிருந்து முன்னள் பிரதியமைச்சர் 50 ஆயிரம் ரூபாவை லஞ்சமாக பெற்றுக் கொண்ட போதிலும், அவர் வாக்களித்தமை போன்று, அந்தப் பெண்ணுக்கு தொழில் எதனைவும் பெற்றுக் கொடுக்கவில்லை என்று, இதன்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்