பியசேனவுக்கு பிணை; 05 மாதங்களின் பின்னர் வெளியில் வந்தார்

🕔 November 21, 2016

Piyasena - 02விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன  இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்துக்குரிய வாகனத்தினை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் ஜுலை மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட பியசேன, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமையினை அடுத்து, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்றம் இவரைப் பிணையில் விடுவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரை 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், ஐந்து மில்லியன் பெறுமதியான 04 சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Comments