ஊதிக் கெடுத்தல்

ஊதிக் கெடுத்தல் 0

🕔30.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது, இந்த அச்சம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.“இலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக

மேலும்...
கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை 0

🕔30.Sep 2016

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலபிடிய இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கினார். அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையினால் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்திருந்தது இந்த வழக்கில் பிரதிவாதிகளான

மேலும்...
யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட  நிறுவனங்களை, மீளக் கட்டியெழுப்புவதற்கு தீர்மானம்

யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட நிறுவனங்களை, மீளக் கட்டியெழுப்புவதற்கு தீர்மானம் 0

🕔30.Sep 2016

– சுஐப் எம்.காசிம் – யுத்த காலத்தில் முசலி பிரதேசத்தில் செயலிழந்துபோன பல்வேறு நிறுவனங்களின் கட்டடங்களை புனரமைத்து, மீண்டும் அதே இடத்தில் அந்த நிறுவனங்களை இயங்கச் செய்வதற்கான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென, அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்வைத்த யோசனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், நானாட்டான் பிரதேசசபை செயலாளரும்,

மேலும்...
தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை

தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔30.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ராணுவத்தினர் ஆக்கிரமித்து – முகாம் அமைத்துள்ள பொதுமக்களின் காணிகளை, மீளவும் உரியவர்களிடம் வழங்குமாறு வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று, இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில், பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் மற்றும் அஷ்ரப் நகர் கிராம மக்கள்

மேலும்...
பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை

பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை 0

🕔30.Sep 2016

பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.இதற்கான விசேட சட்டமூலம் கடந்த 2016 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்விஷேட

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் தவறி விட்டது: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான்

முஸ்லிம் காங்கிரஸ் தவறி விட்டது: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் 0

🕔30.Sep 2016

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பலனாக உச்சக்கட்டப் பிரயோசனத்தை அடைந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்  தேர்தலுக்குப் பின்னர் – தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்வதற்கு தவறி விட்டது என்று அந்த முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் காலங்களில் பொது நோக்கங்களுக்கான கூட்டணிகளை,   மு.காங்கிரசுடன் செய்யக்கூடிய நம்பகத் தன்மையினை இது

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும்: சுமந்திரன்

வடக்கு – கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும்: சுமந்திரன் 0

🕔28.Sep 2016

வடக்கு – கிழக்கு இணைப்பானது, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பூரண சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என்று தாம் கூறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் அவர் கூறினார். இன்று புதன்கிழமை வவுனியாவில் வைத்து,  வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில்

மேலும்...
ஆடுகளை வெட்டும் ஆயுதத்தால், லசந்த தாக்கிக் கொலை செய்யப்பட்டார்: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

ஆடுகளை வெட்டும் ஆயுதத்தால், லசந்த தாக்கிக் கொலை செய்யப்பட்டார்: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 0

🕔28.Sep 2016

ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தினால், தொழில் ரீதியான கொலைகாரர்களைக் கொண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தாக்கி – கொலை செய்யப்பட்டார் என்று, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிரதியமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும்

மேலும்...
ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர்

ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர் 0

🕔28.Sep 2016

– ஓட்டமாவடி அஹமட்  இர்ஷாட் – ‘கிழக்கின் எழுச்சி’யை தெற்கின் சிங்களப் பேரினவாதத்துடன் இணைத்து, மு.காங்கிரஸ் தலைவர் கருத்துக் கூறியிருக்கின்றமை, ஹக்கீமடைய அரசியல் செல்வாக்கு சரிந்தமையினால், ஏற்பட்ட வங்குரோத்து நிலையினை வெளிக்காட்டுவதாக கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹுர் இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை வெளியான தேசிய நாளிதழில் ஹக்கீம் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கின் எழுச்சி, சிங்ஹ லே

மேலும்...
‘எட்கா’ பேச்சுவார்த்தை அழுத்தங்களின்றித் தொடர வேண்டும்:  இந்திய இணையமைச்சர் தெரிவிப்பு

‘எட்கா’ பேச்சுவார்த்தை அழுத்தங்களின்றித் தொடர வேண்டும்: இந்திய இணையமைச்சர் தெரிவிப்பு 0

🕔27.Sep 2016

– சுஐப் எம். காசிம் – இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சேவைகள் மற்றும் முதலீடுகளை பரிவர்த்தனை செய்யும் வகையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான எட்கா (ETCA) பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அழுத்தங்களுமின்றி காலவரையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று, இறுதிக்கட்டத்துக்கு வரவேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக, அந்நாட்டின் கைத்தொழில் மற்றும் வர்த்தக இணையமைச்சர் நிர்மலா

மேலும்...
கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம்

கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம் 0

🕔27.Sep 2016

– ரொபட் அன்­டனி – பக்­கு­வ­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் சம­யோ­சி­த­மா­கவும் செயற்­பட்டால் இனப்பிரச்சினைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிரந்­தரத் தீர்வை காண­மு­டியும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது. ஆனால் வடக்­கிலும், தெற்­கிலும் உரு­வா­கி­யுள்ள இனவாத சக்­தி­களின் செயற்­பா­டு­களே எமக்கு சவா­லாக உள்­ளன. அவர்கள் சித்­து ­விளை­யாட்­டுக்­களை ஆரம்­பித்­துள்­ளனர். இதில் நாங்கள் சிக்­கி­வி­டாமல் நடு­நிலை பேணி செயற்­ப­ட­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன்

லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன் 0

🕔27.Sep 2016

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தமையினால், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆத்திரமுற்ற சம்பவமொன்று இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. லசந்த விக்கிரமதுங்க கொலைச்சம்பவம் தொடர்பாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தனது வீட்டில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தினார், இதன்போது கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை

மேலும்...
லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை

லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை 0

🕔27.Sep 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொல்வதற்கு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை கண்டறிவதற்காகவே அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டதாக, லசந்த கொலை வழக்கு சட்டத்தரணி அதுல ரணகல குறிப்பிட்டுள்ளார். மீள் பிரேத பரிசோதனைக்காக இன்று  செவ்வாய்கிழமை காலை லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டபோது, பொரளை மயானத்தில் பிரசன்னமாகியிருந்த அவர் ஊடகவியலாளர்களிடம் இவ்விடயத்தைக்

மேலும்...
ஜனாதிபதி குடும்ப திருமண நிகழ்வு: சிவப்புச் சால்வையுடன் நாமல்

ஜனாதிபதி குடும்ப திருமண நிகழ்வு: சிவப்புச் சால்வையுடன் நாமல் 0

🕔27.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் டட்லி சிறிசேனவின் புதல்வியினுடைய திருமண நிகழ்வில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டமை தொடர்பான செய்தியினையும் படத்தினையும் நேற்று வெளியிட்டிருந்தோம். ‘ஜனாதிபதியின் தம்பி மகள் திருணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை’ என அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டிருந்தோம். குறித்த செய்தி வெளியிடப்பட்டு 22 மணித்தியாலங்களில்,

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை 0

🕔27.Sep 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பிலபிட்டிய இதற்கான உத்தரவை வழங்கினார். 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 04 சரீரப் பிணையிலும், இவர் விடுவிக்கப்பட்டார். எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினரிடம், தமது விசாரணைகள் நிறைவுபெறவில்லை

மேலும்...